|
அன்று தொட்டு இன்று வரை இறமைகாத்து
நிற்கும்
இந்தியர்களின் பிரஐhயுரிமை பறித்த நம் நாட்டரசு
சீனார்களுக்கு சிவப்புச்சீலை விரித்து வதிவிடம்வழங்கும்
திட்டதை ஊன்றுகின்ற இன்றைய மகிந்த சிந்தனை!!!
பருத்தியில் எத்தனை கொட்டை இருக்கின்றது என்று
தெரியாது பருத்தியை வளர்க்கவும் மற்றும்;, தேயிலை, கொக்கோ,
இரப்பர் போன்ற அந்நியநாட்டு செலவாணிகளை பாதுகாக்கவும்,
சர்வதேசத்தில் புகழும் தனிச்சிறப்பும் பெற்றதற்கு இந்திய
தொழிலாளர்கள் தான் முதற்காரணம் என்பதை முழுமையாக மூடி மறைத்து
தமிழர்களின் மேலாதிக்கத்தின் கைக்கூலிகளை வைத்து இந்திய
அப்பாவிகளின் பிரஐhயுரிமை அதிகாரத்தை அகற்றி இந்திய
பாரம்பரியத்துக்கு அழுவுகள் தேடிய இலங்கை இனவாதவெறியர்கள்
இன்று இருக்கும் சிறுபான்மைக்கு ஒரு உரிமை கொடுத்து
பிரச்சனைகளை தீர்த்து அரசியல் நடத்த வக்கற்றவர்கள் வேலியில்
போன எதையோ ஏணிவைத்து பிடித்து மடியில் கட்ட எண்ணுகின்றது
மகிந்த சிந்தனை என்ற இழிவான பதிவுகளை மகிந்த அரசும் அததை ஆளும்
பாராளுமன்றத்து போக்கற்ற மந்திகளும்; இன்று சிவப்பு சேலை
விரித்து சீனர்களுக்கு இலங்கையில் வதிவிட அனுமதியை வழங்க
குத்திமுறிவது ஏன்??? என்ற கேள்விகள் மலையகத்தில்
உள்ளவர்களையும் மற்றைய அரசியல் வட்டார பிரமுகர்கiயும் அதிர
வைத்துள்ளது. இந்த வதிவிட அனுமதி கொடுக்கும் திரனை தன்
அதிகாரத்தில் தன்னிச்சையாக எமுத்த ஐனாதிபதியால் சிறுபான்மையின்
பிரச்சனைக்கு முடிந்த அளவு ஒரு சமரசதீர்வை முன்வைத்து நாட்டின்
பொருளாதாரத்தையும் மற்றும் வளங்களையும் பெருக்க முயலக்கூடாது.
அப்படி பெருக்க முன்னெடுக்கும் வழிகளை திறந்த மனதோடு மேசையில்
வைத்து திறந்து வழிகளை நடத்தும் பொழுது
எம்நாட்டின்
உள்ள எந்த நாட்டு பிரiஐகளுக்கும் யாரும் எங்கும் வதிவிடத்தை
அனுமதிக்க முடியும் அல்லவா? அப்படி செய்யாது இன்றைய குதக்கமான
நிலைப்பாடு மேலும் பலத்த இனவாதத்தை உருவாக்கி வதிவிடம் தேடும்
சீனர்களையாரும் கொலை செய்தால் அரசியல் ஆபாயகரமாக நிலைக்குள்
தள்ளப்பட்டு நாட்டின் பொருளாதாரம் இருக்கும் மட்டத்தை விட்டு
கீழ் செல்வதற்கு பல சந்தர்ப்பத்தை இன்று மகிந்த சிந்தனை
முடுக்கின்றது என்ற அச்சம் பரவலாக பலர் மனதிலும் உதித்துள்ளது.
என தமிழ் ஏடு ஆசிரியர்.

இலங்கையில் ஜனநாயக
உரிமைக்கு
எந்த விதமான உத்தரவாதமும்
கிடையாது என்ற குற்றச்சாட்டு!!!
மக்கள் சார்பு அரசு
என்று கூறிக்கெண்டு நாட்டு மக்களின் கண்களில் மண்ணைத் தூவும்
அரசுதான் இன்று நாட்டை
ஆண்டு
கொண்டிருக்கின்றது. அரசு தவறான நிலையில் தனது பயணத்தை மேற்கொண்
டுள்ளது. தற்போதைய அரசியலமைப்புத் திருத்தம்
நிறைவேற்றப்படுமானால், எமது நாடு சர்வாதிகார நாடாக மாறும்
காலம் வெகு தொலைவில் இல்லை என்பதை நாட்டு மக்கள் அனைவரும்
உணர்ந்துகொள்ள வேண்டும்.17ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தில்
காணப்பட்ட சுயாதீன ஆணைக் குழுவில் உள்ள சுயாதீன பொலிஸ்
ஆணைக்குழு முற்றாக நீக்கப்படவுள்ளது. பொலிஸ் ஆணைக்குழு இல்லாது
போனால், நாட்டில் அராஜகம் தலைவிரித்தாடும். அரசியல்வாதிகளின்
முறை கேடுகளும் அதிகரிக்கும். நாளை நிச்சயமாக அரசியல்
வாதியொருவரின் பிள்ளை பரீட்சையில் சித்தியடைய வில்லை என்றால்
அந்த மாணவனின் ஆசிரியர் மரத்தில் கட்டப்படலாம். இவ்வாறான
காரணங்களைக் கருத்தில் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி 18 ஆவது
அரசியலமைப்புத் திருத்தத்தை எதிர்க்கத் தீர்மானித்தது. இந்த
அரசை அதிகாரத்துக்குக் கொண்டுவர கை கொடுத்தவர்களில்
ஜே.வி.பி.முக்கியமான கட்சியாகும். இன்று நான் ஜனாதிபதியுடன்
பேசுவதாக குற்றச்சாட்டு சுமத்துகின்றனர். தவறான தலைவரை
அதிகாரத்தில் அமர்த்திவிட்டு இன்று என்னை குறை கூறுவது
அர்த்தமற்றதாகும் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கும்
அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்கும்
முகமாக மக்கள்; தெளிவானமுடிவு எடுக்கவேண்டும்
குறுகிய
நோக்கத்துக்காக ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாட்டைத்
தோற்கடிப் பதற்கான பொறுப்பு
எதிர்க்கட்சிக்கு
மட்டுமின்றி அரசில் அங்கம் வகிப்போருக்கு முண்டு. அந்த வகையில்
திருத்தத்துக்கு ஆதரவளிக்க வேண்டாமென சகல பாராளுமன்ற
உறுப்பினர்களையும் வலியுறுத்துகின்றோம். சர்வாதிகார ஆட்சிக்கு
வழிவகுக்கும் அரசியலமைப்புத் திருத்தத்தை தோற்கடிக்கும் முகமாக
மக்களைத் தெளிவுபடுத்தி மக்கள் சக்தியைப் பலப்படுத்த
நாடுபூராகவும் 20 இலட்சம் துண்டுப் பிரசுரங்களை
ஜே.வி.பி.விநியோகிக்கித்தது. ஆனால் சிறுபான்மை கட்சிகள் என்ன
செய்கின்றது? ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் பொறுப்பு தனித்து
எதிர்க்கட்சிக்கு மட்டுமன்றி அரச கட்சியிலுள்ள வர்களுக்கும்
உண்டெனவும் சுட்டிக்காட்டுகின்றது அல்வா?? மேலும் அரசாங்கம்
அரசியலமைப்புத் திருத்தம் குறித்து மக்களுக்கு உண்மையை
மறைத்துத் தெளிவுபடுத்தாது அவசரமாக மேற்கொள்கின்றது.
அரசியலமைப்பு என்பது நாட்டின் அடிப்படைச் சட்டமாகும். அதில்
மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமானால் அதை மக்கள் அறிந்திருக்க
வேண்டும். அத்துடன் அதை மக்கள் ஏற்க வேண்டும்.
அரசாங்கம் மக்களுக்கு மூடிமறைத்து
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு
வந்து நிறைவேற்றிக் கொள்ளப் போகின்றது
அரசியலமைப்புத்
திருத்தம் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் முகமாக நாம்
20 இலட்சம் துண்டுப்
பிரசுரங்களை
நாடு பூராகவும் விநியோகிக் கவுள்ளோம். இதன் மூலம் மக்கள்
சக்தியைப் பலப்படுத்தி சர்வாதிகார செயற்பாட்டைத் தோற்கடிப்போம்.
இதற்காக அணிதிரள்வோம். மேற்படி விநியோகிக்கும் நிகழ்வில்
பாராளுமன்ற உறுப்பினர்களான அநுரகுமார திசாநாயக்க விஜிதஹேரத்
மற்றும் ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் லால்காந்த ஆகியோர்
பங்குபற்றினர் மேலும் அரசாங்கம் மக்களுக்கு மூடிமறைத்து
அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றிக்
கொள்ளப் போகின்றது. அரசியலமைப்புத் திருத்தமானது நாட்டுக்கு
நன்மையானால் முன்கூட்டியே வெளிப்படுத்தியிருக்கும். இதனை
மூடிமறைத்துச் செய்வதற்குக் காரணம் அதிகாரங்களைக் கையில்
எடுத்து சர்வாதிகாரப் போக்கில் செயற் படுவதற்கேயாகும்.
நாட்டிற்குப் பாதகமான அரசியலமைப்புத் திருத்தத்தைக் கொண்டு
வந்திருப்பது பொய் மற்றும் வஞ்சக வழியிலாகும். இந்தத்
திருத்தத்தின் மூலம் மக்களுக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை.
அதுபோல் இலவசக் கல்வி மற்றும் சுகாதார சேவையைப் பாதுகாக்க
முடியாது என்பதுடன் தேசிய பிரச்சினை யைத் தீர்ப்பதற்கோ
ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கோ எதுவுமில்லை.
40 வருடங்கள் நாட்டுக்காகப் போராடிய
ஒரு தளபதியை பழிவாங்கும் ஆளும்
ஐனநாயகம் என்ற விசனம்!!
முன்னாள் இராணுவத்
தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் பட்டங்கள், பதக்கங்களை
பறிப்பதோடு மட்டும்
அரசாங்கம்
நின்றுவிடவில்லை. அவரைப் பழிவாங்கும் மனப்போக்கு மிக மோசமான
நிலைக்கு வந்துள்ளது. அரசு அவரது ஓய்வூதியத்தைப் பறித்து
வயிற்றிலடித்துவிட்டது. 40 வருடங்கள் நாட்டுக்காகப் போராடிய
ஒருதளபதியின் அனைத்து அடிப்படை மனித உரிமைகளும் ஒவ்வொன்றாக
பறிக்கப்பட்டு வருகின்றது. இது என்றும் ஐனநாயக பாதைகள் அல்ல.
எமது நாட்டில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாக அரசு
வெளி உலகுக்குக் காட்ட முனைந்தாலும், இங்கு நடப்பவற்றை
சர்வதேசம் நன்கு அவதானித்த வண்ணமே உள்ளது. அன்று நாட்டின்
சிறந்த தளபதி, சிறந்த அரச ஊழியர் என்று புகழாரம் சூட்டப்பட்ட
ஜெனரல் சரத் பொன்சேகா இன்று தேசத்துரோகியாக்கப்
பட்டிருக்கின்றார். ஜெனரல் பொன்சேகாவின் ஓய்வூதியம் பறிக்கப்
பட்டிருப்பது ஏனைய அனைத்து அரசு ஊழியர்களுக்கும்
விடுக்கப்பட்டிருக்கும் அச்சுறுத்தலாகும். இந்த ஆபத்திலிருந்து
அரச ஊழியர்களைப் பாதுகாத்துக் கொள்வதற் காக அரசியல் பேதம்
பாராமல் சகல அரச ஊழியர் தொழிற்சங்கங்களும் ஒன்றுபட்டு போராடத்
தயாராக வேண்டும். இதற் கெல்லாம் கால அவகாசம் பார்த்துக்
கொண்டிருக்க முடியாது. அனை வரும் உடனடியாக போராட்டக் களத்தில்
இறங்கவேண்டும். மேலும் அரசாங்கத்தின் தவறான பயணத்தை தடுத்து
நிறுத்தி நாட்டில் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கு அனைத்து ஜனநாயக
சக்திகளும் உடனடியாக ஒன்றுபட்டுப் போராட அணிதிரள வேண்டுமென
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அழைப்பு விடுத்தார்.
அரசியல் குறுகிய
நோக்கத்திற்காக அபாண்டமான
பிரச்சாரங்களை எதிர்கட்சிகள் மேல் சேறுபூசஎண்ணுவது
ஆளும்கட்சியின் ஆரோக்கிய மற்ற அரசியல் அல்ல
நாட்டின்
ஜனநாயகத்துக்கு விரோதமான செயற்பாட்டைத் தோற்கடிப் பதற்கான
முற்சிகளை மேற்கொள்ளவேண்டிய
ஐனாதிபதி.
இன்று, தனது தெளிவற்ற அரசியல் திருத்தங்களுக்கு எதிர்க்
கட்சியினர் துணை நிற்கவில்லை என்ற காரணத்தை மட்டும் மனதில்
வைத்து. அவர்கள் பயங்கரவாதத் திற்கு பணம் கொடுத்ததாக குற்றம்
சாட்டுவது, ஆரோக்கிய அரசியலுக்கு உகந்தது இல்லை என்று அரசியல்
வட்டாரங்கள் ஆய்வுகளை வெளியிடுகின்றார்கள் என்பது
குறிப்பிடத்தக்கது. மேலும் புலிகளுக்கு நிதி வழங்கியதாக
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.
யுத்தத்தை முன்னெடுக்க பணம் இல்லை என கூறி எதிர்க்கட்சி 2002
ஆம் ஆண்டு போர் நிறுத்தத்தை மேற்கொண்டது. இதன் மூலம் நாட்டை
காட்டிக்கொடுக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. யுத்தத்தை
முன்னெடுக்க முடிய வில்லை எனக் கூறிய எதிர்க்கட்சியினர்
புலிகளுக்கு நிதிகளை வழங்கினர். இந்த நிலையில் தமது அரசாங்கம்,
நிதி பற்றாக்குறை இருந்த நிலையிலும் யுத்தத்தை நிறைவுக்கு
கொண்டு வந்து அபிவிருத்தியையும் முன்னெடுப்பதாக
தெரிவித்துள்ளார். இதேவேளை யுத்தம் நிறைவடைந்து விட்ட போதும்,
அபிவிருத்தி பணிகள் நிறைவடையாது முழுமை யான பயனை பெற முடியாது
என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் இன்று புலிகளுக்கு
முதல் வழிகாட்டியாக இருந்த தலைவர்களுடன் ஆளும்கட்சி கைகோர்த்து
விசாரணை கள் இன்றி ஆட்சி நடத்துகின்றது. அமைச்சர் பதவிகள்
வழங்குகின்றது. எனினும் எதிர்கட்சிகள் பணம் கொடுத்ததாக கூறும்
குற்றுச்சாட்டுக்களுக்கு உரிய ஒரு ஆதாரங்களும் இதுவரை
வெளிக்கொண்டு வரவில்லை என்ற பதிவிலும் இல்லை என்றும் அரசியல்
வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகிறன.
|