அஞ்சாமை! நேர்மை!! உண்மை !!!

02-09-2010. 09: 55:00

 

மரங்களை அழிக்கும் வைரஸ்கிருமிகள் போல் சுயநலத்து இரட்டைவேட தாழ்வுமனப் பான்மை

 கொண்ட வைரஸ்கிருமிகள்

இன்று சமூகத்தை அழிககின்றது

அநாகரீகமான செயல் திட்டங்களுக்கு அரசு இடமளித்ததால். இன்று சிறுவர் கல்விபோய் சீர்திருத்தத்திற்கு சிறப்புப் பள்ளிகள் ஆரம்பம்!

02-09-2010. 09: 55:00

திருமணத்திற்கு முன்பே கர்ப்பம் தரிக்கும் "கன்னித்தாய்'களுக்கு சமூகம் ஒவ்வொன்றும் ஒருபெயரை வைத்து அவர்களின் எதிர்காலத்து கனவை குழியில் போட்டு, சமூகசீரழிவை மேற்கொண்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் இலாபத்திற்காக சமூகசீரழிவுகளை மேற்கொள்ளும் திட்டங்கள் தான் நாட்டுக்கு நாடு அதிகரித்து வருகின்றது. இந்ததிட்டத்தை மட்டப்படுத்தி "கன்னித்தாய்'களுக்கு சமூகத்தில் ஒருநல்ல வரவேற்பை எதிர்கொள்ள இன்று மலேசியாவில் சிறப்புப் பள்ளி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது என்பது பலராலும் வரவேணற்கத்தக்கது இன்றைய நவீன உலகில் திருமணத்திற்கு முன்பே "டீன் ஏஜ்' பெண்கள் கர்ப்பமாகும் நிலை அதிகரித்து வருகிறது. அப்படிப்பட்ட "கன்னித்தாய்'களுக்காக மலேசியாவின் மலாக்கா மாநிலத்தில் சிறப்புப் பள்ளி தொடங்கப் பட்டுள்ளது.  பிரச்னைகளில் இருந்து மீண்டு வருவதற்கும், சிறப்பான எதிர்காலத்தை அமைப்பதற்கான இரண்டாவது வாய்ப்பை ஏற்படுத்தித் தரும் வகையிலும் இந்தப் பள்ளியில் அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். குழந்தை பிறந்த பின் இந்த "கன்னித்தாய்'கள் தாங்கள் ஏற்கெனவே படித்த பள்ளிகளில் சென்று மீண்டும் கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுவார்கள். இன்று ஆரம்பக் கல்வியில் கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்று விதைத்த காலம் போய் நவீன உலகின் உள்ள அநாகரீகமான செயல் திட்டங்களுக்கு நாட்டில் அரசு இடமளித்ததால் இன்று கல்வி என்ற சீர்திருத்த சிறப்புப் பள்ளிகள் சர்வசாதாரண முறைக்குள் வந்துவிட்டது.

இடத்தை கண்டுபிடிக்க

பல்லாயிர இராணுவத்தொடு மந்திகள்

கூட்டம்மாதிரி ஊர்வலம் செய்வதை விட ரயில் பயணம் பொருளாதாரத்திற்கு.

02-09-2010. 09: 55:00

எந்த விதபாதுகாப்பும் ஆர்ப்பாட்டகளும் இல்லாது நாட்டில் பணத்தை மிச்சம் பிடிக்கும் தன்மை கொண்ட நடவடிக்கைகளை தன்நாட்டுக்காக மக்களின் வளங்களுக்காக பிரியோசனப்படுத்தி பொருளாதாரத்தை மிச்சம் பிடிக்கவேண்டும்  என்ற எண்ணத்திற்கு தலைவர்கள் ஆட்சிக்கு வரவேண்டும். இதேசமயம் சீனாவுக்கு பயணம் மேற்கொண்ட வட கொரிய தலைவர் இரண்டாவது கிம் ஜோங் அங்கிருந்து நாடு திரும்பிவிட்டார். அவர் தமது நாட்டுக்கு ரயிலில் வந்து கொண்டிருக்கிறார் என்று தென் கொரிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. எனினும்  வட கொரிய தலைவர் இரண்டாவது கிம் ஜோங் பதவியை தனது மகன் ஜோங் யுன்னிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான இசைவை சீனாவிடம் இருந்து பெறுவதற்கே அவர் அங்கு ரயிலில் சென்றார். அவருடன் அவரது மகன் ஜோங் யுன்னும் சென்றிருந்ததாக அதிகாரபூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்றும் அந்த செய்தி நிறுவனம் கூறியுள்ளது. மற்றைய நாட்டு பொருளாதாரத்தை விட முன்னேற்றம் காணவேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்ட தலைவர்கள் அதிகாரிகள் என்றும் பல்லாயிரம் இராணுவத்தொடு மந்திகள் கூட்டம்மாதிரி ஊர்வலம் செய்யமாட்டார்கள் என்று முற்போக்கு ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டும் விதிமுறைகளை நாமும் கற்றுக்கொண்டால் என்ன??? என்று கேள்விகளை எம்நாட்ட தலைவர்களை பார்த்து நாம் கேட்கத்தவறிய கோளைகள். எனினும்  சில மாதங்களுக்கு முன்பு தென் கொரிய கப்பல் மூழ்கடிக்கப்பட்டது. இதில் 46 வீரர்கள் கொல்லப்பட்டனர். தங்களது கப்பலை வட கொரியாதான் தாக்கியதாக தென் கொரியா குற்றம் சுமத்தியது. இதைத் தொடர்ந்து வட கொரியாவுக்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன என்பதும் குறிப்பிவேண்டிய விடயம்.

இந்திய நாட்டின் முக்கியமான இடங்களில்

பலத்த பாதுகாப்பிற்காக படையினர் 553

பணியிடங்களை உருவாக்க ஒப்புதல்

02-09-2010. 09: 55:00

இந்திய வங்கதேச எல்லையில் 3 கி.மீ. தொலைவுக்கு முள்வேலி அமைக்கும் பணியும், 5 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கும் பணியும் நிறைவடைந்துள்ளன. 7 கி.மீ. தொலைவுக்கு முள்வேலி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. நக்ஸலைட்டுகளால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் வளர்ச்சிக்காக கடந்த மாதத்தில் |23.54 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நக்ஸல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள 5 மாநிலங்களில் 12 ஆயிரம் கூடுதல் சிறப்பு போலீஸ் அதிகாரிகளை நியமிக்க ஒப்புதல் அளிக்கப் பட்டுள்ளது. காவல்துறை நவீனமயமாக்கத்துக்காக பல்வேறு மாநிலங்களுக்கு |212 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அணுஉலை போன்று நாட்டின் முக்கியமான இடங்களில் பாதுகாப்புப் பணிக்காக மத்திய தொழிலக பாதுகாப்புப் படையில் 553 பணியிடங்களை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை ஆவடி பாதுகாப்பு தளவாட பணிமனை பாதுகாப்புக்காக 27 பணியிடங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

படங்களை ஓன்லைனில் அனிமேஷனாக படமாக(.gif) மாற்ற

ஆஸ்திரேலிய பிரதமர் ஜுலியா கில்லார்டின் லேபர் கட்சிக்கு பசுமைக்கட்சி எம்.பி. ஆதரவு

02-09-2010. 09: 55:00

ஆஸ்திரேலியாவில் ஆகஸ்ட் 21ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 70 ஆண்டுகளில் இப்போது தான் முதல்முறையாக எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால் தொங்கு நாடாளுமன்றம் அமைந்துள்ளது. டோனி அபாட் தலைமையிலான லிபரல் கட்சி-தேசிய கூட்டணிக்கு 73 இடங்களும் பிரதமர் ஜூலியா கில்லார்டின் லேபர் கட்சிக்கு 72 இடங்களும் கிடைத்தன. எந்த கட்சிக்குமே பெரும்பான்மைக்கான 76 இடங்கள் கிடைக்கவில்லை. இந்நிலையில் பருவநிலை மாறுபாடு கமிட்டி அமைப்பதாக கில்லார்டு ஒப்புக்கொண்டதற்கு ஈடாக லேபர் கட்சிக்கு நாடாளு மன்றத்தில் தமது கட்சியின் ஒரே உறுப்பினரான ஆடம் பந்த் ஆதரவு தருவார் என பசுமைக் கட்சி தலைவரும் செனட் அவை உறுப்பினருமான பாப் பிரொüன் தெரிவித்தார். இருப்பினும் பெரும்பான்மை பலம் பெற இன்னும் 3 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படுகிறது. கட்சி சார்பற்றவர்களாக இருக்கும் 3 எம்பிக்கள் மற்றும் புதிதாக தேர்வாகியுள்ள சுயேச்சை எம்பி ஆண்ட்ரூ விக்கி ஆகியோர் தமது ஆதரவு யாருக்கு என்பதை அறிவிக்கவில்லை.

பாஸ்வேர்ட் கொடுத்து சேமித்த  PDF File களை திறந்து படிக்க உதவும் தளம்

இந்திய- சீன எல்லையில் சாலையில்

சீனத் துருப்புகளின் நடமாட்டம், அத்துமீறல் என  .சிதம்பரம்

02-09-2010. 09: 55:00

மேற்கு வங்கத்தில் முகாம்களில் ஆயுதங்களுடன் தொண்டர்கள்: மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் ஆயுதங்களுடன் தொண்டர்கள் உள்ளதை எல்லோரும் ஒப்புக் கொள்கின்றனர். மார்க்சிஸ்ட் மறுப்பு: முகாம்களில் ஆயுதங்களுடன் தொண்டர்கள் உள்ளதாக அமைச்சர் .சிதம்பரம் கூறியுள்ளது ஆதாரமற்றது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்திய கமிட்டி உறுப்பினர் முகமது சலீம் கூறியுள்ளார். அரசியல் நிர்பந்தம் காரணமாகவும், மாவோயிஸ்டு தலைவர் ஆசாத் கொலை குறித்த சர்ச்சையை திசை திருப்பவுமே அவர் இதுபோன்று கூறியுள்ளார். மாவோயிஸ்டுகளின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காகவே இந்த முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன என்றும் சலீம் குறிப்பிட்டார். இதேசமயம் இந்திய- சீன எல்லையில் சாலை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்றுவருகிறது என மத்திய உள்துறை அமைச்சர் .சிதம்பரம் தெரிவித்தார். எல்லையில் சீனத் துருப்புகளின் நடமாட்டம், அத்துமீறல் போன்றவை கடந்த சில மாதங்களாக அதிகரித்துள்ளன. இதை கவனத்தில் கொண்டு இந்திய துருப்புகள் எல்லைக்கு எளிதாகச் சென்று வரவசதியாக இந்தப் பணி மேற்கொள்ளப் பட்டுள்ளதாகத் தெரிகிறது. ஆகஸ்ட் மாதத்தில் தனது அமைச்சகம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து புது தில்லியில் செய்தியாளர்களிடம் .சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

Babelfish

வட கொரியாவின் அணு ஆயுத உற்பத்தியையும்

வர்த்தகத்தையும் முடக்கும் நோக்கில் அமெரிகர்

02-09-2010. 09: 55:00

வட கொரியாவின் ரகசிய அணு ஆயுதத் திட்டத்துக்கு உடந்தையாகவுள்ள நிறுவனங்கள், தனிநபர்களின் சொத்துக்களை முடக்கியும், அவர்கள் அமெரிக்காவின் நிதி அமைப்பு முறையினை பயன்படுத்த முடியாத வகையிலும் இந்த பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட கொரியாவின் அணு ஆயுதத் திட்டத்துக்காக போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்பாட்டின் மூலம் நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ள அந்நாட்டின் ரகசிய பிரிவுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத ஏற்றுமதி, இறக்குமதியில் ஈடுபட்டுள்ள கிரீன் பைன் அசோசியேட் கார்ப்பரேஷன் மற்றும் அதன் தாய் நிறுவனத்தின் மீதும் பொருளாதாரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள கொரியாவின் நிறுவனங்களான தேசோங் வர்த்தக நிறுவனம் கொரியா ஹியூங்ஜின் வர்த்தக நிறுவனம் ஆகிய இரு நிறுவனத்துக்கும் இந்த புதிய பொருளாதாரத் தடை பொருந்தும். இந்த இரு நிறுவனங்களும் ஈரான், சிரியாவுடன் ஆயுத வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளன என்று அமெரிக்க தரப்பில் கூறப்பட்டுள்ளது. பேச்சு நடத்த விருப்பம்-அமெரிக்கா இதனிடையே, வட கொரியாவுடன் எப்போது வேண்டுமானாலும் பேச்சு நடத்த தாங்கள் தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் உபயோகமான வகையில் பேச்சு இருக்கும் என்றால் மட்டுமே வட கொரியாவுடன் பேச்சு நடத்த விரும்புவதாகவும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பி.ஜே.குரோவ்லே தெரிவித்துள்ளார்.

Google

 800 இந்திய தொழிலாளர்கள்

உணவின்றித் தவிப்பு!!!

02-09-2010. 09: 55:00

நகரசபைக்கு உரிய வரியைக் கட்டாததால், தொழிலாளர் முகாம்களில் உள்ள குடிதண்ணீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. மேலும், கழிவுநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப் பட்டுள்ளது. இதனால் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாமல் கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. குப்பைகளும் அகற்றப்படாமல் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றது எனஇபது குறிப்பிடத்தக்கது. இதேசமயம் ரியல் எஸ்டேட் துறை, பொருளாதாரசரிவால் நலிவடைந்துள்ளது. கட்டுமானத் துறையில் ஈடுபட்டுள்ள தொழில் அதிபர்கள் பலர் நாட்டை விட்டே ஓட்டம் பிடித்துவிட்டனர். இவற்றால் அன்றாட உணவிற்கு போராடும் தொழிலாளர்கள் வேலை இன்றி தவிக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவில் ஒரு பொறியியல் கம்பெனியில் பணி புரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த 6 மாதங்களாக ஊதியமே தரவில்லை என்றும், இதனால் அந்த கம்பெனியின் தொழிலாளர் முகாம்களில் வசிக்கும் 800 இந்திய தொழிலாளர்கள் உணவின்றித் தவிக்கின்றனர் இந்த நிலையில் இந்த 800 இந்தியத் தொழிலாளர்களுக்கும் சம்பளம் தரப்படாமல் உள்ளதால் அவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டுள்ளனர்.

Promt

 பேசுவதற்குத் தயாராக இருக்கிறோம்

என்ற குறிவைத்து வளைவீசும் அரசு.

02-09-2010. 09: 55:00

காஷ்மீரில் எந்தக் குழுவுடனும் பேசத் தயார்: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தையைத் தொடரவே அரசு விரும்புகிறது. எந்தத் தேதியில் இந்தப் பேச்சு நடைபெறும் என கூறமுடியாது. எனினும், கூடிய விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என்ற நம்பிக்கை உள்ளது. காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் என பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது. ஆனால், காஷ்மீர் பிரச்னை குறித்து மத்திய அரசின் கொள்கை குறித்து ஏற்கெனவே பலமுறை பிரதமர் மன்மோகன் சிங்கும், நானும் தெளிவுபடுத்திவிட்டோம். நாங்கள் அறிவித்த கொள்கை காஷ்மீரில் அமைதியை நிலை நாட்டும் என்ற நம்பிக்கை உள்ளது.(பாதுகாப்புப் படை சிறப்பு அதிகார சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வது, மாநிலத்தில் உள்ள 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, சரணடையும் தீவிரவாதிகளுக்கு சிறப்புத் திட்டம் போன்றவை விரைவில் அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன). காவி பயங்கரவாதம் வார்த்தை எனது கண்டுபிடிப்பல்ல: காவி பயங்கரவாதம் என்ற வார்த்தை எனது கண்டுபிடிப்பல்ல. ஏற்கெனவே காங்கிரஸ் தலைவர்கள் இதை பலமுறை பயன்படுத்தியுள்ளனர். வலதுசாரி மத அடிப்படைவாத அமைப்புகள் நமது நாட்டில் உள்ளன. குறிப்பிட்ட வார்த்தையைப் பயன்படுத்துவதால் நாம் சொல்ல வந்த கருத்து புரியாமல் போய்விடக் கூடாது. இந்த விஷயத்தில் காவி பயங்கரவாதம் வார்த்தையைப் பயன்படுத்தியதால் உண்மையான பொருள் எல்லோருக்கும் விளங்கிவிட்டது. எனினும், இந்த சர்ச்சை தொடர்பாக கட்சியின் கருத்தே இறுதியானது. (பயங்கரவாதத்துக்கு நிறம் எதுவும் கிடையாது என இந்த சர்ச்சை குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜனார்தன் துவிவேதி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது). எனவே சட்டம்-ஒழுங்கு மாநிலம் தொடர்பான விவகாரம் என்பதால் இது குறித்து மேற்கு வங்க அரசுதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் .சிதம்பரம்.

சிவராமின் ஆவி மன்னிக்காது

el;Gj; jsq;fs;
 
 

திடீரென்று எம்நாட்டு இந்த தலைவர்கள்; சோம்பலாகிக்கொண்டு செல்கின்றார்கள் என்ற விடையம்தான் இன்று பிரதிபலிக்கின்றது. ஒருவனுக்கு கிடைக்கும் அதிகளவு வருமானம் தான் அவனின் ஆரோக்கியம் குன்றச்செய்கின்றது. அதுபோல்தான்; இவர்கள் நிலையும் இது ஆபத்தான அரசியல்போக்கு, என்பதை எடுத்துக் காட்டுகின்றது. எமது பொருளாதார வழிகளை அழிக்கும் வழிகள்தான் இந்த நிலை இன்று நாடு முழுவதையும் பௌத்த மயமாக்கும் திட்டத்தில் அக்கரை கொண்டு இனவாத அநாகரிக முறைகளை கையில்வைத்துக் கொண்டு நடத்தும் அரசியலும். அதன் வழிகளும் இன்று தேவையா?? பழைய புராதணப் பொருட்களை கார்த்து சுற்றுலாப் பணிகளை வரவளைக்க வேண்டிய முன்னேற்ற பாதைகள் முடக்கப் பட்டுள்ள பட்சத்தில், மீண்டும் மறைமுக இனவாதத்தை வகுக்கின்றது. முக்கியமாக மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுச் சென்று நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை பெற்றுத்தந்து கொண்டிருக்கின்றனர். இந்த

ஐனநாயஊடகம்

நிலையில் எமதுநாட்டு தலைவர்கள் அக்கரைகொண்டு ஆரோக்கிய திட்டத்தை முடுக்கிவிடாது முட்டாள் தனமான நடமுறைகளை இன்றைய நாகரீக உலகில் வைத்திருக்கின்றார்கள் என்றால். இவர்கள் எப்படியான ஒரு அரசியல் முறைகளை வைத்துள்ளார்கள்??? என தமிழ் ஏடு ஆசிரியர். 

ஆரோக்கியமற்ற சோம்போறித்தனமிக்க அமைச்சர்களால்

நடத்தப்படும் அரச வருமானத் திட்டங்கள் இன்று

முழுமையாக முடக்கப்பட்டுள்ளது. அதுஏன்???

02-09-2010. 09: 55:00

நாட்டில் கடந்த 30வருடமாக நடந்த போராட்த்தின் காரணமாக, பல அழிவுகளை நாம் சந்தித்துள்ளோம் என்பது தான் உண்மை. இதனை இன்றைய ஆளும்கட்சி உடனே முடித்து வைப்பது என்பது நடக்கும் கதையல்ல. இதற்கு காலம் வேண்டும் என்பதும் அடுத்த உண்மை. ஆனால் எமது நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவு என்பதை நாம் எல்லோரும் நன்கு அறிந்த விடயம். இதேபோல் நாட்டு பொருளாதாரம் படுத்து தூங்குகின்றது. இத்தனையையும் ஐனாதிபதி தனியாக நின்று குடைபிடித்து தூக்க முடியாது. என்பதை, இலங்கையர்கள் ஒவ்வொருவரும் நன்கு முதலில் புரிந்துகொள்ள வேண்டும் என்பதும், ஆணித்தரமான உண்மை. இப்படியாக ஒவ்வொரு மனிதனுக்கும் புரியவைக்கும் பாரிய கடமையை ஊடகங்கள் தலையால் எடுத்து செய்யும் பொழுது. எமது நாட்டு பாராளுமன்றத்து அமைச்சரகள் எப்படியான சோம்பேறித்தனமான வேலைத் திட்டங்களை செய்கின்றார்கள்.? அது ஏன்?? இதனை தட்டிக்கேட்கும் பொறுப்பு யாரின் கையில் உள்ளது??? குறிப்பாக கடந்த காலத்தில் வெளிநாடுக ளுக்கு சென்ற வேலையாட்களினால் இலங்கை அரசுக்கு வருமாணங்கள் அதிகமாகவே வந்து கொண்டு இருந்தது. இந்த திட்டங்களில் ஊழல் அதிகரித்ததால் பலர் இலங்கையில் இருந்த சென்ற பல தொழிலாளர்கள் தமது முழுமையான வேலைத் திட்டத்தை முடியாது இடையிலே திரும்பும் துர்பாக்கிய நிலைகள் ஏற்ப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது என ஈரனல்

உத்தேச அரசியல்சாசன திருத்தங்களுக்கு

உச்ச நீதிமன்றம் எதிர்ப்பு!!! ஆனால்!!!

02-09-2010. 09: 55:00

புதிய அரசியல் சாசன திருத்தங்களின் அடிப்படையில் ஜனாதிபதிக்கு அதீத அதி காரங்கள் வழங்கப் படவில்லை. ஆணைக்குழுக்களின் மூலம் பொதுநிர்வாக கட்டமைப்பு உறுதி செய்யப்படும். உத்தேச அரசியல் சாசன திருத்தங்களுக்கு எதிர்ப்பை வெளியிட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் வெளியிட்ட மனுக்கள் தொடர் பில் கருத்துவெளியிட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் புதிய அரசியல் சாசன திருத்தங்களின் மூலம் மக்களின் உரிமைகள் உறுதிப் படுத்தவுள்ளதாக சட்டமா அதிபர் மொஹான் பீரிஸ் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தவணைக் காலத்தை நீடிப்பதற்கான திருத்தம் கூட ஒருவகையில் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றக் கூடியதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி மூன்று மாதங்களுக்கு ஒருதடவை நாடாளுமன்றத்துக்கு பிரசன்னமாக வேண்டும் என்ற யோசனை இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜனாதிபதி நாடாளுமன்றத்துக்கு பொறுப்புச் சொல்லக் கூடியதாக காணப்படுவார்.

தொழிற்சங்க மகா சம்மேளனம் உத்தேச

அரசியலமைப்புத் திருத்தத்தால் அரசதுறை

அரசியல் மயப்படுத்தப்படுமென கவலை

02-09-2010. 09: 55:00

இதற்கு எதிரான நடவடிக்கை தொடர்பில் அரச ஊழியர்கள் தொழிற்சங்கம் அரசியல் வாதிகளுடனான கருத்தரங்கை எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடத்தவுள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் தொழிற்சங்க மகா சம்மேளனம் நேற்று புதன்கிழமை கொழும்பில் நடத்திய ஊடகவியலாளர் மகாநாட்டில் அதன் செயலாளர் சமன் ரத்னபிரிய, தலைவர் அன்டன் மார்க்கஸ், பொருளாளர் என்.ஜி.ஆர்.அத்துல்ல, தேசிய அமைப்பாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் சிரேஷ்ட உறுப்பினர் நவரட்ண பண்டார ஆகியோர் தெரிவித்தனர். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் பதவிக்காலத்தை இருதடவைக்கு மேல் அதிகரிப்பதற்காக  அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள அரசியலமைப்புத் திருத்தத்தை நாம் எதிர்க்கின்றோம். தற்போதைய அரசியலமைப்பிலுள்ள ஜனாதிபதி முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இல்லா தொழிப்பதாக கோரியே இந்த அரசாங்கம் 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது இந்நிலையில் இதனைச் செய்யாது இந்த முறைமை அதிகரிக்கப் படுவதையிட்டே எதிர்க்கின்றோம் என்றார்.

 

மக்களுக்கு உரிமைகள் வேண்டும் என்றால்

திறந்தமனதோடு சுருங்கிய உண்டியோடு

சிறுபான்மை புறப்படவேண்டுமல்லவா???

02-09-2010. 09: 55:00

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை ஒருவர் இரு தடவைகளே வகிக்க முடியுமென தற்போதைய அரசியலமைப்பில் உள்ளது. எனவே அப்பதவியை வகிக்கக் கூடிய தடவைகளின் எண்ணிக்கையை மேலும் அதிகரிப்பதற்காகக் கொண்டு வரப்படும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாகவே ஒவ்வொரு அமைப்பும் தன்மக்ளுக்காக புடைசூழ எழுந்து நிற்கும் பொழுது சிறுபான்மை என்ற சக்திகள் எதற்கு மறைந்திருந்து கனவுகான்கின்றார்கள்???

நாம், நமது வேலைத்திட்டங்களை செய்வதற்கு! மக்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்கு! மக்கள் சக்திகள் தான் தேவை!!! ஆனால், உண்டிசுருங்காது மக்கள் பணத்தில் வாழ்ந்துகொண்டு இருக்கும் இவர்கள் மக்களின் தலைவர்களா??? என்ற கேள்விகள் புலம்பெயர் நாடுகளில் எழுகின்றது. புலம்பெயர் மக்களின் கையில் தான் தாயமக்களின் வாழ்வு இருக்கின்றது, என்று உஷார் படுத்தி எதையோ எதிர்பாக்கும் இந்த சிறுபான்மை தலைவர்கள் அரசின் தவறான எண்ணத்திற்கு குரல் கொடுக்கத் தவறியது ஏன்?? இதேசமயம் அரசாங்கத்தின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக மக்களைத் தெளிவுபடுத்தும் முகமாக நாடு முழுவதும் இன்று வியாழக்கிழமை 20 இலட்சம் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கவுள்ளதாக ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் இன்று இந்தத் துண்டுப்பிரசுர விநியோக நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன், இதன்பிரதான நிகழ்வு இன்று வியாழக் கிழமை காலை 10 மணிக்கு கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் முன்பாக நடைபெறு மென்றும் இதில் ஜே.வி.பி.தலைவர்கள் பங்கு கொள்வார்கள் என்றும் அக்கட்சி குறிப்பிட்டுள்ளது.

 

அகதிகாரிகளும் அமைச்சர்களும் அக்கரையில்லாது

அரசாங்கத்திற்கு பலத்த நட்டத்தையும் பொருளாதார

வீழ்ச்சியையும் ஏற்படுத்துகின்றார்கள்.

02-09-2010. 09: 55:00

வேலைததிட்டத்தை அரச அமைச்சர்களிடம ;இருந்து சோம்பேறித்தனமாக உழைக்கும் அல்லது ஊழல்களில் இருக்கும் அமைச்சரின் ஆதரவாளர்கள் தான் மேற்கொண்டு நடத்தி வந்தவர்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் பலமாக எழுகின்றது. இந்த தொழிலாளர்கள் வெளிநாடுகளுக்கு செல்லும் பொழுது கொடுத்த பணத்தின் தொகை அதிகமாகவே காணப்பட்டது ஒருபுரமிருக்க மறுபுரத்தில் அரசாங்க வேலைத் திட்டங்களுக்கு இந்த தொழிலாளர்கள் அனுப்பப்பட்டு இருந்தால் என் குறித்த வேலைத் திட்டங்கள் முடியாது எப்படி திருப்பி அனுப்பமுடியும்? அத்தோடு பல தொழிலளார்கள் தம்பணத்தை கொடுத்துத்தான் திரும்ப எமது நாட்டுக்குள் வந்துள்ளார்கள். அப்படியானால் இந்த தொழிலாளர்களுக்கு கட்டப்பட்ட காப்புறுதிப் பணம் எந்த வழியில் யார் திருடியவர்கள்??  என்ற கேள்விகளும் எழுகின்றது. இப்படி யாக கடந்த காலத்தில் வெளிநாட்டு நாட்டில் எமது நாட்டைச் சேர்ந்த பல இலட்சக் கணக்கானோர் மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் பெற்றுச் சென்று நாட்டுக்கு பெருமளவு அந்நியச் செலாவணியை பெற்றுத் தந்து கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் அரச அகதிகாரிகளும் அமைச்சர்களும் அக்கரையில்லாது தொடர்ந்த அரசாங்கத்திற்கு பலத்த நட்டத்தையும் நாட்டுக்கு பாரிய பொருளாதார வீழ்ச்சியையும் ஏற்படுத்தக் காரணமாக உள்ளார்கள் என்ற விசனம் மக்களிடமும் இன்று தலைதூக்கி விட்டது. முன்பு எதிர்கட்சிகள் தான் தொட்டதற்கும் எழுந்து குரல்கொடுப்பார்கள் ஆனால் இக்காலத்தில் அதிகமாக மக்கள் தான் குரல் கொடுக்கின்றார்கள் பாராளுமன்றத்து அமைச்சர்கள் ஆரோக்கியமற்று  சோம்பேறிகளாக போய் விட்டார்களா??? என்ற கேள்விகள் தான் இன்று அதிகம். மேலும் மக்களின் உடல் உழைப்பின் மூலம் மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றும் எம்மவர்கள் பெற்றுத் தரும் பெருமளவு பணம் நாட்டின் எதிர்காலத்திற்கு பயன்படுத்தப்படுகின்றது. ஆனால் இவ்வாறு தொழில் பெற்றுச் செல்வோரின் பாதுகாப்பை உறுதிப் படுத்துவதில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் அங்குள்ள எமது நாட்டு தூதரகங்களின் அதிகாரிகள் அதிக கவனம் செலுத்துவதில்லை என்று எதிர்கட்சிகள் குற்றும் சாடுகின்றார்கள்.

 

இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக்

கொண்டே பணிகள் உள்பட அனைத்து

திட்டங்;கள்  என நிருபமா ராவ உறுதி.

02-09-2010. 09: 55:00

இலங்கையில் இந்தியா மேற்கொண்டு வரும் மறு குடியமர்வு மற்றும் நிவாரணப் பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்த இருப்பதாக இலங்கை பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இதை நிருபமா திட்டவட்டமாக மறுத்தார். இலங்கையில் உள்ளூர் தொழிலாளர்களைக் கொண்டே கட்டுமானப் பணிகள் உள்பட அனைத்து நிவாரணப் பணிகளும் மேற்கொள்ளப்படும். இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களை மறுபடியும் குடியமர்த்துவதற்கான பணிகளில் இந்தியத் தொழிலாளிகளை ஈடுபடுத்தமாட்டோம் என்று இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் கூறினார். மூன்று நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள நிருபமா